குறும்செய்திகள்

19-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

19th June Today Raasi Palankal

இன்று ஜூன் 19.2021

பிலவ வருடம், ஆனி 5, சனிக்கிழமை, 19.6.2021
வளர்பிறை, நவமி திதி மதியம் 2:50 வரை,
அதன்பின் தசமி திதி, அஸ்தம் நட்சத்திரம் மாலை 6:13 வரை,
அதன்பின் சித்திரை நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
பொது : பெருமாள் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: மருத்துவ செலவுகள் குறையும். வியாபாரப் பிரச்னைகள் தீரும்.
பரணி: அனுபவசாலி ஒருவரின் அறிமுகம் உதவிகரமாக இருக்கும்.
கார்த்திகை 1: உறுதியோடு செயல்படுவீர்கள். சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: மற்றவர்களின் பணியை ஏற்றுச் செய்து மகிழ்ச்சி தருவீர்கள்.
ரோகிணி: பணி பற்றிய முயற்சிகளில் சாதகமான பலன் தாமதமாகும்.
மிருகசீரிடம் 1,2: எந்த வயதினருக்கும், உரிய உழைப்புக்கு பலன் கிடைக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினரிடையே அன்பு கூடும். திடீர் நன்மை வரும்.
திருவாதிரை: மற்றவர்க்கு, உங்கள் மீது மதிப்பு உயரும்படி செயல்படுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் இருந்து வந்த சமீபத்திய நிலை மாறும்.

கடகம்:

புனர்பூசம் 4: கருணை அதிகரிக்கும். தெய்வீக சிந்தனைகள் கூடும்.
பூசம்: உணவு விஷயத்தில் கவனமாக இருந்தால் ஆரோக்யம் பிழைக்கும்.
ஆயில்யம்: தாயார், தாய்வழி உறவினர் மூலம் நன்மைகள் உண்டு.

சிம்மம் :

மகம்: பிள்ளைகளின் திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
பூரம்: தடைகள் நீங்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பு கண்ணுக்குத் தெரியும்.
உத்திரம் 1: வீண்செலவுகள் தீரும். இரக்கமும் பக்தியும் அதிகரிக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சமீபத்தில் மனதை ஆக்கிரமித்திருந்த மகிழ்ச்சிக் குறைவு நீங்கும்.
அஸ்தம்: பிறரை நம்பி எந்தவித வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்.
சித்திரை 1,2: வாழ்க்கைத்துணைக்கு ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.

துலாம்:

சித்திரை 3,4: வழக்குகளின் போக்கு மிகவும் மந்தமாகவே இருக்கும்.
சுவாதி: தனிப்பட்ட விவகாரங்களில் முன்பைவிட முன்னேற்றம் இருக்கும்.
விசாகம் 1,2,3: அவ்வப்போது மந்தமான நிலை காணப்பட்டாலும் இனிய நாளே.

விருச்சிகம்:

விசாகம் 4: வாழ்வில் வளம் சற்றுக்கூடும். சிறு பயணத்தால் நன்மை வரும்
அனுஷம்: அதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கையாள வேண்டும்.
கேட்டை: அபூர்வமாகக் கிடைக்கும் வாய்ப்பு ஒன்று வரவிருக்கிறது.

தனுசு:

மூலம்: வெளிநாடுகளுக்கு செல்லும் விருப்பம் தாமதமாகும்.
பூராடம்: பெரிய திட்டம் ஒன்று சிறு தடைகளுக்குப்பின் நிறைவேறும்
உத்திராடம் 1: குடும்பத்தில் மகிழ்ச்சியும் கவலையும் மாறி மாறி நிலவும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பெயர், புகழை நிலைநிறுத்த கடினமாக உழைப்பீர்கள்.
திருவோணம்: கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தப் பாடுபடுவீர்கள்.
அவிட்டம் 1,2: வீட்டிலும் வெளியிலும் சுற்றியிருப்போரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.
சதயம்: மேற்கொள்ளும் பணிகளில் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும்.
பூரட்டாதி 1,2,3: வார்த்தைகளை கவனத்துடன் பயன்படுத்துவது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: மற்றவர்களின் பொறுப்பு எதையும் ஏற்க வேண்டாம்.
உத்திரட்டாதி: உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றி உடனே சரியாகும்.
ரேவதி: எடுத்த பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு அதை முடிக்க வேண்டி வரும்.

19th June Today Raasi Palankal

Related posts

திருமணம் ஆன ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

Tharshi

பரந்தனில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை..!

Tharshi

இரண்டாவது டி20 போட்டி : நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி..!

Tharshi

Leave a Comment