குறும்செய்திகள்

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கும் வெங்காய தேநீர்..!

Onion Tea to control Blood Pressure

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிப்பதனால், வயதானவர்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.

இன்றைய கால கட்டத்தில், தேநீர் பிரியர்களை வசப்படுத்துவதற்காக பலவகையான தேநீர்கள் புழக்கத்தில் இருக்கின்றன.

அவற்றுள் வெங்காய தேநீரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர் பருகுவது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.

உயர் இரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் வெங்காயத்தில் உள்ள குர்செடின் கெட்ட கொழுப்பை குறைக்க துணைபுரியும்.

மேலும், வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் இரத்த உறைவை தடுக்கவும் உதவும். வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. வெங்காய தேநீர் தயாரிப்பது எளிதானது. தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.

Onion Tea to control Blood Pressure

Related posts

முதல் மூன்று மாதங்களில் திருமணமான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்..!

Tharshi

வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டது : இந்திய ரசிகர்களை வம்புக்கு இழுத்த மைக்கேல் வாகன்..!

Tharshi

31-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

1 comment

Leave a Comment