குறும்செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய சிரஞ்சீவி : நெகிழ்ச்சியில் பொன்னம்பலம்..!

Chiranjeevi donates Rs2lakhs to Ponnambalam kidney transplant

தமிழ் சினிமாக்களில் வில்லன் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் பொன்னம்பலம். அனேகமான படங்களில் இவரை பொன்னம்பலம் என்று சொல்வதைவிட “கபாலி” என்று சொன்னால் தான் பலருக்கும் தெரிந்த ஒரு வில்லன் நடிகராக பரிச்சயமானவர்.

பொன்னம்பலம் இடையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.

பொன்னம்பலத்திற்கு கிட்னி கோளாறு காரணமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவருக்கு கிட்னி அறுவை சிகிச்சை செய்வதற்கு பண உதவி தேவைப்பட்டதாக தெரிகின்றது.

இந்நிலையில், பிரபல தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி பொன்னம்பலத்திற்கு 2 லட்சம் ரூபாய் பண உதவி அளித்து நெகிழ வைத்திருக்கிறார். இதையடுத்து பொன்னம்பலம் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு நன்றி சொல்லி நெகிழ்ந்து, ஒரு வீடியோவையும் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதுபற்றி அந்த வீடியோவில் உருக்கமாகப் பேசி இருக்கும் பொன்னம்பலம்..,

“சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம்! ஜெய் ஸ்ரீராம்.. ரொம்ப நன்றி அண்ணா.. கிட்னி அறுவை சிகிச்சைக்காக நீங்கள் கொடுத்த 2 லட்சம் ரூபாய் மிகவும் உதவிகரமாக இருந்தது. அதனை உயிருள்ளவரை மறக்க மாட்டேன். அண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. உங்கள் பெயர் கொண்ட ஆண்டவர் ஆஞ்சநேயரும் சிரஞ்சீவியாக உங்களை வைத்திருப்பார். ஜெய் ஸ்ரீராம் நன்றி அண்ணே.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Chiranjeevi donates Rs2lakhs to Ponnambalam kidney transplant

Related posts

வைரலாகும் அஜித்தின் வலிமை கிளிம்ப்ஸ்..! (வீடியோ இணைப்பு)

Tharshi

லாஸ்லியாவின் நடிப்பில் உருவாகும் கூகுள் குட்டப்பா பட டீசர்..! (Video)

Tharshi

தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment