சுவையான காலிஃப்ளவர் சூப்பில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
அத்துடன், வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது.
அந்தவகையில், காலிஃப்ளவர் சூப் எப்படி செய்வதென்று பார்ப்போமா..!
தேவையான பொருள்கள் :-
காலிஃப்ளவர் -250 கிராம்
வெங்காயம் -1
பூண்டு – 2
கிராம்பு – 2
கருப்பு மிளகு – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பிரியாணி இலை -1
மில்லி – சிறிதளவு
தைம் இலைகள் – 2
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
வேர்க்கடலை -10 கிராம்
செய்முறை :
வெங்காயம், காலிஃப்ளவர், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும், அதில் ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், பிரியாணி இலை சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கழித்து, வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது, தைம் இலையை சேர்க்கவும்.
அடுத்து கடாயில் காலிஃப்ளவர் பூக்களைச் சேர்த்து, வேக வைக்கவும்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து, இந்த கலவையிலிருந்து பிரியாணி இலைகள் மற்றும் தைம் இலைகளை அகற்றி மீதமுள்ள கலவையை ஒரு பிளெண்டரில் போட்டு, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கலவையை நன்றாக பேஸ்டில் அரைக்கவும்.
இப்போது அரைத்த கலவையை கடாயில் எடுத்துக் கொள்ளுங்கள்.
சிறிது பால் மற்றும் வேர்க்கடலையைச் சேர்த்து, கலவையை சிறிது திக்கான பதம் வரும் வரை கிளறவும்.
பத்தே நிமிடத்தில் சுவையான காலிஃப்ளவர் சூப் தயார்… 🙂