குறும்செய்திகள்

12-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

12th June Today Raasi Palankal

இன்று ஜூன் 12.2021

பிலவ வருடம், வைகாசி 29, சனிக்கிழமை,
12.6.2021, வளர்பிறை, துவிதியை திதி இரவு 7:38 வரை,
அதன்பின் திரிதியை திதி, திருவாதிரை நட்சத்திரம் மாலை 4:38 வரை,
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்
பொது : சந்திர தரிசனம், அனுமன் வழிபாடு

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: அலைபேசி மூலம் கேட்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.
பரணி: பிரகாசமான வாய்ப்பு வரும். எடுத்த செயலில் வெற்றி காண்பீர்கள்
கார்த்திகை 1: தெளிவான தீர்மானங்களால் பணியிடத்தில் நல்லபெயர் வரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: புது வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு உற்சாகம் கிடைக்கும்.
ரோகிணி: விட்டுக் கொடுப்பீர்கள் என்பதால் பிரச்னைகள் நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: கிடைக்கவிருக்கும் நன்மையை யாராலும் அசைக்க முடியாது.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதில் தடைகள் வரக்கூடும்.
திருவாதிரை: தம்பதிகள் மூன்றாவது நபரின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்
புனர்பூசம் 1,2,3: புதிய அதிர்ஷ்டம் வரும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: விடிவு காலம் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
பூசம்: குடும்பத்தில் இருந்துகொண்டிருந்த குழப்பங்கள் நீங்கும்.
ஆயில்யம்: வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள்.

சிம்மம் :

மகம்: கவனம் சிதறும். யாரிடமும் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்,
பூரம்: மூத்தவர்களுடன் நேற்று இருந்த சச்சரவுகள் நீங்கும்.
உத்திரம் 1: மனம் மகிழ்ச்சியடையும்படியான சம்பவங்கள் நடைபெறும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் தாமதித்தே வரும்.
சித்திரை 1,2: வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி மெயிலில் வரும்.

துலாம்:

சித்திரை 3,4: தாயாரின் ஆரோக்கியம் பற்றிய பழைய பயம் இன்று தீரும்.
சுவாதி: பெற்றோரின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்
விசாகம் 1,2,3: எதிர்பாலினத்தினரிடம் பழகும்போதும், பேசும்போதும் கவனம் தேவை.

விருச்சிகம்:

விசாகம் 4: திருப்தியான நாளாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
அனுஷம்: அலுவலகப் பணிகளில் நிதானமாக செயல்படுவது நல்லது.
கேட்டை: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருந்தால் கவலை ஏதுமில்லை.

தனுசு:

மூலம்: நண்பர்களிடையே வாக்கு வாதங்கள், மன உளைச்சல் இருக்கும்.
பூராடம்: முயற்சிகளில் வெற்றி வரும். எதிர்பார்த்த நன்மை நிகழும்.
உத்திராடம் 1: குடும்பக் கவலைகள் மறையும். செலவை சமாளிக்க முடியும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நல்ல தகவல் வரும். காதலர்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
திருவோணம்: நேர்மையான எண்ணங்கள் உருவாகும். தேவையற்ற பயம் தீரும்.
அவிட்டம் 1,2: வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. கனவு நனவாகும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சிறிய வெற்றி ஏற்படும். மனநிறைவு உண்டு
சதயம்: பேச்சாற்றலால் அலுவலகத்தில் பணிகளை முடித்துக் காட்டுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும்.

மீனம்:

பூரட்டாதி 4: பகையைவிடுத்து நட்பாவது பற்றிச் சிந்திப்பீர்கள். லாபம் உயரும்.
உத்திரட்டாதி: கற்பனை வளம் அதிகரிக்கும். காதல் கைக்கூடும் வாய்ப்புள்ளது
ரேவதி: முந்தைய முயற்சியில் வெற்றி வரும். முன்னேற வழி கண்டறிவீர்கள்.

12th June Today Raasi Palankal

Related posts

நாள் முழுவதும் எனர்ஜியுடனும்.. சுறுசுறுப்பாகவும் இருக்க..!

Tharshi

26-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கலாய்க்கும் நெட்டிசன்கள் : சற்றும் கலங்காத பெரிய முதலாளி வீட்டு பிரபல நடிகை..!

Tharshi

Leave a Comment