குறும்செய்திகள்

ஒருதலைக்காதல் விவகாரம் : இளம் பெண் குத்திக் கொலை – சகோதரி படுகாயம்..!

21 year old woman stabbed to death by stalker in Kerala

ஒருதலைக்காதல் விவகாரத்தால் இளம் பெண் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் எலநாடைச் சேர்ந்தவர் பாலசந்திரன் இவரது மூத்த மகள் திரிஷ்யா( வயது 21) இவரை அவருடன் படித்த பள்ளி நண்பர் வினீஷ் வினோத் ( 21) ஒருதலையாக காதலித்து வந்தார். திரிஷ்யா எங்கு சென்றாலும் அவரை வினோத் பின் தொடர்ந்து சென்றார்.

இதனை திரிஷ்யா தனது தந்தையிடம் தெரிவித்தார் இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் பாலசந்திரன் பொலிசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் கடந்த 16 ந்தேதி பாலசந்திரனின் கடை க்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வினோத் நேற்று காலை திரிஷ்யாவின் வீட்டுக்கு சென்று உள்ளார். வீட்டின் கீழ் பகுதி பூட்டப்பட்டு இருந்தது கதவை உடைத்து திறந்து உள்ளே சென்ற வினோத் மேல் மாடியில் இருந்த திரிஷ்யாவை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.

அதை தடுக்க வந்த திரிஷ்யாவின் சகோதரி தேவஸ்ரீக்கும் கத்திகுத்து விழுந்தது. திரிஷ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேவஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தப்பிக்க முயன்ற வினோத்தை ஆட்டோ ஓட்டுனர் ஜவகர் என்பவர் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். வினோத் சட்டக்கல்வி படித்து வந்துள்ளார்.

21 year old woman stabbed to death by stalker in Kerala

Related posts

வேலை தேடு அல்லது வெளியே போ என கூறிய தந்தை : ஆத்திரத்தில் குடும்பத்தினரை காலி செய்த மகன்..!

Tharshi

2020 பரா ஒலிம்பிக் : முதல் தங்கத்தை வென்ற அவுஸ்திரேலியா..!

Tharshi

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அஜித்தின் 30 அடி கட் அவுட்..!

Tharshi

Leave a Comment