குறும்செய்திகள்

சூர்யா 40 பட லேட்டஸ்ட் அப்டேட்..!

Suriya 40 Movie Latest Update

பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகர் சூர்யாவின் 40 வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூர்யா 40 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜூலை 2 வது வாரத்தில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் நடித்து முடித்த பின், நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் “வாடிவாசல்” படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Suriya 40 Movie Latest Update

Related posts

கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 67 பேர் உயிரிழப்பு..!

Tharshi

23-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இலங்கையில் இன்று இதுவரை 2,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment