குறும்செய்திகள்

05-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

5th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 05.2021

பிலவ வருடம், ஆவணி 20, ஞாயிற்றுக்கிழமை,
தேய்பிறை, திரயோதசி திதி காலை 8:04 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, ஆயில்யம் நட்சத்திரம் மாலை 6:48 வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்
பொது : ராமர், சூரியபகவான் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நல்ல நண்பர்களிடம் எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
பரணி: குழந்தைகள், குடும்பத்தினரால் சிறு சிறு மகிழ்ச்சி ஏற்படும்.
கார்த்திகை 1: திட்டமிட்டு செய்தவை நல்லவிதமாக நடைபெறும் நாள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.
ரோகிணி: வெளிவட்டார நட்பு விரிவடையும். கலைஞர்கள் வெற்றி பெறுவர்.
மிருகசீரிடம் 1,2: உழைப்பால் வென்று பாராட்டு பெற்று மகிழ்வீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைத்து சமாளிப்பீர்கள்.
திருவாதிரை: புது பங்குதாரரை இப்பேதைக்குச் சேர்க்க வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு திருப்தி உண்டாகும். கணவருக்கு பதவி உயரும்.

கடகம்:

புனர்பூசம் 4: திட்டமிட்ட விஷயங்கள் தடையுடன் நடைபெறும் நாள்.
பூசம்: வருமானம் போதுமானதாக இருந்தாலும் தேவையற்ற கவலை இருக்கும்.
ஆயில்யம்: நட்பென்று நம்பியவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

சிம்மம் :

மகம்: மாற்று மருத்துவத்தால் தாயின் உடல் நலம் சீராகும்.
பூரம்: இளைஞர்கள் புதிய விஷயத்தில் செய்த முயற்சி பலன் தரும்.
உத்திரம் 1: நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்காமலும் சமாளிப்பீர்கள்.
அஸ்தம்: வேற்று மொழி பேசுபவர்கள் நட்பாவர்கள். கவனம் தேவை.
சித்திரை 1,2: சிலர் மீது இருந்த அபிப்ராயம் மாறும். இழந்த பொருள் கிடைக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: குழந்தைகள் பல சாதனைகள் செய்து சந்தோஷப்படுத்துவார்கள்.
சுவாதி: பல காலம் ஆசைப்பட்ட விஷயம் ஒன்றை நிறைவேற்றுவீர்கள்.
விசாகம் 1,2,3: மின்சாரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.
அனுஷம்: பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும்போது கவனமாகப் பேசுங்கள்.
கேட்டை: வளர்ச்சிக்கு தேவையான புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

தனுசு:

மூலம்: பூர்வீக சொத்துப் பிரச்னைகள் நல்ல முடிவிற்கு வரும்.
பூராடம்: சமுதாயப்பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். நன்மைகள் கூடும்.
உத்திராடம் 1: பதற்றம் காரணமாக சிரமத்துக்கு உள்ளாக வேண்டாம்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: அஜாக்கிரதை இல்லாமல் செயல்படுவது நல்லது.
திருவோணம்: அவசியமற்றவர்களிடம் அநாவசியத் தகவலைப் பகிர வேண்டாம்.
அவிட்டம் 1,2: பல கால முயற்சி லேசான வெற்றியை நோக்கிப் போகும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.
சதயம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான அடையாளம் தெரியும்.
பூரட்டாதி 1,2,3: விலை உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: உழைப்போரின் எண்ணம் ஒன்று பெருமுயற்சியால் நிறைவேறும்.
உத்திரட்டாதி: குடும்ப ஒற்றுமைக்கு எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
ரேவதி: பகைவர் ஒருவர் நட்பாக வாய்ப்புண்டு. மகிழ்ச்சி அதிகரிக்கும்.

5th September Today Raasi Palankal

Related posts

கர்ப்ப காலத்தில் வரும் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்..!

Tharshi

யார் யார் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் : அதன் பலன்கள் என்ன..!

Tharshi

My work only allows Internet Explorer, so I have to manually

Tharshi

Leave a Comment