குறும்செய்திகள்

19-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

19th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 19.2021

பிலவ வருடம், புரட்டாசி 3, ஞாயிற்றுக்கிழமை,
வளர்பிறை, திரயோதசி திதி காலை 6:40 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, சதயம் நட்சத்திரம் அதிகாலை 4:18 வரை,
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூசம்
பொது : ராமர், சூரியபகவான் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: புகழும், பாராட்டும் அதிகரிக்கும். நேற்றைய சிரமங்கள் நீங்கும்.
பரணி: உடன் பணிபுரியும் நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.
கார்த்திகை 1: உங்களுடைய ஆலோசனைகளை மற்றவர்கள் ஏற்பார்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் கவனம் தேவை.
ரோகிணி: வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவார்கள்.
மிருகசீரிடம் 1,2: அலைச்சலுடன் ஆதாயம் உண்டு. முயற்சி வெல்லும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிப்பதால் நிம்மதி நிலவும்.
திருவாதிரை: யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த நபரின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: பணியாளர்கள் மனதில் மாறுபட்ட யோசனைகள் உதிக்கும்.
பூசம்: திடீரென்று அறிமுகமாகும் நபரால் பெண்கள் பயன் அடைவார்கள்.
ஆயில்யம்: வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மாறாது.

சிம்மம் :

மகம்: யாருக்காவது பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள்.
பூரம்: இன்று அதிகமாக உழைப்பதால் மன நிறைவும், லாபமும் உண்டு.
உத்திரம் 1: வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. பிறரிடம் கனிவாகப் பழகுங்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் பணியாளர்களிடம் கடுமை காட்ட வேண்டாம்.
அஸ்தம்: இளைஞர்கள் முயற்சி காரணமாக முன்னேறும் நாள்.
சித்திரை 1,2: கடந்த காலத்தில் கிடைத்த பாடங்களால் கவனம் கூடும்.

துலாம்:

சித்திரை 3,4: பெற்றோரின் ஆதரவு பெருகுவதால் சாதனை செய்வீர்கள்.
சுவாதி: வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுமளவு தரம் உயரும்.
விசாகம் 1,2,3: அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் ஏற்கப்படும்.

விருச்சிகம்:

விசாகம் 4: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு முன்பைவிட அதிகரிக்கும்.
அனுஷம்: முயற்சியால் முன்னேறுவீர்கள். அதிகாரிகள் உதவுவார்கள்.
கேட்டை: பணியாளர்கள் அதிகமாகப் பாடுபடுவதால் பலன் கூடும்.

தனுசு:

மூலம்: பொது விஷயங்களில் ஈடுபடுவீர்கள். சிறு வருத்தங்கள் உண்டு.
பூராடம்: நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த பிரபலத்தைச் சந்திப்பீர்கள்.
உத்திராடம் 1: நன்மை நிகழும். அனுபவ அறிவால் வெற்றி பெறுவீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பணியிடத்திலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும்.
திருவோணம்: பெண்கள் பிரச்னைகளைச் சமாளித்து நிம்மதி காண்பீர்கள்.
அவிட்டம் 1,2: பரபரப்பாக காணப்படுவீர்கள். வீட்டைச் சீர் செய்வீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவி செய்வார்கள்.
சதயம்: உடன்பிறந்தோர் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
பூரட்டாதி 1,2,3: திடீர் பணவரவு காரணமாகப் புதிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: குடும்பத்தினர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.
உத்திரட்டாதி: அவசரமாக சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும்.
ரேவதி: பணியாளர்களுக்கு நினைத்தது நிறைவேறுவதில் சிரமம் ஏற்படும்.

19th September Today Raasi Palankal

Related posts

12-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

பிக்பாஸ் வீட்டில் போட்ட குத்தாட்டம் : கடுப்பாகி வீட்டுக்கு கிளம்பிய ஜி.பி.முத்து..!

Tharshi

சர்ச்சையில் சிக்கி தவிக்கும் சர்ச்சை நடிகரின் படம்..!

Tharshi

Leave a Comment