குறும்செய்திகள்

யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்ற பெண் கவலைக்கிடம்..!

The woman who tried to have an abortion by watching YouTube

இளம்பெண் ஒருவர் “யூடியூப்” பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்று கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சேர்ந்த 25 வயது பெண், ஆண் நண்பர் ஒருவருடன் பழகி வந்தார். இதில் அவர் கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி ஆண் நண்பரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் கருவை கலைத்துவிடும்படி கூறினார். மருத்துவமனைக்கு சென்று கருக்கலைப்பு செய்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் ரகசியமாக கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்தனர்.

இந்நிலையில், இதுசம்பந்தமாக யூடியூப்பில் சில வீடியோக்கள் இருப்பதை பார்த்து ஆண் நண்பர் அதுபற்றி அந்த பெண்ணிடம் கூறினார். யூடியூப் வீடியோவை பார்த்து அதன்படி கருக்கலைப்பு செய்து கொள்ளும்படி கூறினார்.

அவர் சொன்னது போல யூடியூப் வீடியோவை பார்த்தபடியே கருக்கலைப்பு முயற்சியில் அவர் ஈடுபட்டார். இதில் அவருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. ரத்தப்போக்கு அதிகமாகி மயங்கிய நிலைக்கு சென்றார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பந்தமாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவருடைய ஆண் நண்பர் யார் என்றும் விசாரித்தனர். சோயுப்கான் (வயது 31) என்பவர் தான் தனது நண்பர் என்று அந்த பெண் கூறினார்.

இதையடுத்து அவர் மீது பொலிசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

The woman who tried to have an abortion by watching YouTube

Related posts

கொரோனா கால நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சாலட் செய்முறை..!

Tharshi

கறிவேப்பிலை ரச சூப் எவ்வாறு செய்யலாம்..!

Tharshi

தற்கொலை செய்யப் போகின்றேன் : வீடியோ வெளியிட்டு நதியில் குதித்து உயிரிழந்த வெளிநாட்டவர்..!

Tharshi

Leave a Comment