குறும்செய்திகள்

08-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

8th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 08.2021

பிலவ வருடம், புரட்டாசி 22, வெள்ளிக்கிழமை,
வளர்பிறை, துவிதியை திதி மதியம் 1:45 வரை,
அதன்பின் திரிதியை திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 10:43 வரை,
அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : மகாலட்சுமி, குபேர வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நல்ல விஷயம் ஒன்று முடிவாகலாம். உற்சாகம் கூடுதலாகும்.
பரணி: சிறு வருமானம் உண்டு. பழைய நண்பர்கள் சந்திப்பு ஏற்படும்.
கார்த்திகை 1: பரபரப்பான நாள். முக்கியமானவர்களை சந்திப்பீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: அதிர்ஷ்டம் காரணமாக முதலீடு லாபம் தரும்.
ரோகிணி: நம்பிக்கைக்குரிய நண்பர்கள் மூலம் நன்மை ஒன்று ஏற்படும்.
மிருகசீரிடம் 1,2: உழைப்பு அதிகரித்தாலும் உற்சாகம் குறையாது.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: குடும்பப் பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும்.
திருவாதிரை: வீட்டிற்கு தேவையான பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: தாமதப்பட்ட நல்ல விஷயம் ஒன்று தீர்மானிக்கப்படும்.

கடகம்:

புனர்பூசம் 4: வெளியூர் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.
பூசம்: தாயின் உடல்நலம் பற்றி இருந்து வந்த கவலை நீங்கும்.
ஆயில்யம்: அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த தகராறு அகலும்.

சிம்மம் :

மகம்: அலுவலகத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படும். சிறு ஆதாயம் உண்டு.
பூரம்: விருந்து உண்பீர்கள். எதிர்ப்புகள் பற்றி கவலைப்பட வேண்டாம்.
உத்திரம் 1: வீடு மாற்றம், அலுவலக மாற்றம் ஏற்படக்கூடும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சிறு தடைகளும் தாமதங்களும் நீங்கி நிம்மதி வரும்
அஸ்தம்: உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காத குறை இன்று நீங்கும்.
சித்திரை 1,2: பணியிடத்தில் நீங்கள் விரும்பியபடி பொறுப்பு மாற்றப்படலாம்.

துலாம்:

சித்திரை 3,4: முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் விலகும்.
சுவாதி: தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் உதவி செய்வர்.
விசாகம் 1,2,3: பெண்கள் குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறை கொள்வர்.

விருச்சிகம்:

விசாகம் 4: பணியாளர்களுக்கு பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு கிடைக்கலாம்.
அனுஷம்: முன்னேற்றம் கூடும். கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும்.
கேட்டை: கவலை ஒன்று தீரும். வெளிநாட்டிலிருந்து நன்மை வரும்.

தனுசு:

மூலம்: பல காலமாக மனதில் இருந்த பயம் ஒன்று தீரும்.
பூராடம்: குடும்ப சூழல் திருப்தி தரும். நண்பர்கள் ஒற்றுமை பலப்படும்.
உத்திராடம் 1: குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு நெருங்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
திருவோணம்: குடும்பத்தினர் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வர்.
அவிட்டம் 1,2: பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த கசப்பை நீக்குவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: ஆரோக்கியத் தொல்லை நீங்கும். எதிலும் நிதானப்போக்கு இருக்கும்
சதயம்: உறவினரிடம் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பூரட்டாதி 1,2,3: தந்தையால் இருந்து வந்த சில பிரச்னைகள் அகலும்.

மீனம்:

பூரட்டாதி 4: வாகனப் பழுதுகளால் மனதில் ஏற்பட்ட வாட்டம் நீங்கும்.
உத்திரட்டாதி: மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
ரேவதி: அவசரப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருந்தால் இனிய நாளாகும்.

8th October Today Raasi Palankal

Related posts

தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு..!

Tharshi

சீனாவில் திவாலாகும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம்..!

Tharshi

வீட்டின் குளியல் அறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள்..!

Tharshi

Leave a Comment