குறும்செய்திகள்

22-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

22nd October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 22.2021

பிலவ வருடம், ஐப்பசி 5, வெள்ளிக்கிழமை,
தேய்பிறை, துவிதியை திதி நள்ளிரவு 12:05 வரை,
அதன்பின் திரிதியை திதி, பரணி நட்சத்திரம் இரவு 7:26 வரை,
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை
பொது : மகாலட்சுமி, குபேரர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: எதிர்பார்த்த புதிய செய்திகள் சற்றுத் தாமதமாகவே வரும்.
பரணி: நெருங்கிய உறவினர் பற்றி இருந்து வந்த கவலை தீரும்.
கார்த்திகை 1: பண நெருக்கடி தீரும். குழந்தைகளால் நிம்மதி ஏற்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: நவீன உபகரணங்களை வாங்குவதில் ஆர்வம் கொள்வீர்கள்.
ரோகிணி: தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.
மிருகசீரிடம் 1,2: எதிர்பாராத உதவி கிடைக்கும். மன அமைதி ஏற்படும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பணியாளர்களுக்கு திட்டமிட்ட பயணங்கள் தடைப்படும்.
திருவாதிரை: எச்சரிக்கையுடன் செயல்பட்டு சிரமத்தில் இருந்து மீளுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: திறமை வெளிப்படும். திட்டமிட்ட விஷயம் சிறப்பாக நடைபெறும்.

கடகம்:

புனர்பூசம் 4: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பற்றிச் சிந்திப்பீர்கள்.
பூசம்: சங்கடம் தீரும். சந்தோஷம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
ஆயில்யம்: அலுவலகத்தில் புதிய மாற்றம் ஒன்று உருவாகும்.

சிம்மம் :

மகம்: நாளை வரும் என நினைத்த நன்மை இன்றே வந்து சேரலாம்.
பூரம்: உங்களின் அந்தஸ்தும், செல்வாக்கும் உயரும்படியான செயல்கள் நிகழும்.
உத்திரம் 1: வளர்ச்சி அதிகரிக்கும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: தொழில் பற்றிய திட்டம் ஒன்று வெற்றி பெறும்.
அஸ்தம்: பெரிய மனிதர்கள் உங்களுக்கு தரும் வாக்குறுதியை நம்ப வேண்டாம்.
சித்திரை 1,2: உடல் நலத்தில் கவனம் தேவை. சச்சரவைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்:

சித்திரை 3,4: பேச்சிலும் செயலிலும் ஆற்றல் மிகும். குதுாகலமான நாள்.
சுவாதி: பணி மாற்றம் பற்றி நன்கு யோசித்த பிறகே செயல்பட வேண்டும்.
விசாகம் 1,2,3: செலவுகளால் கையிருப்புக் கரையலாம். கவலை வேண்டாம்.

விருச்சிகம்:

விசாகம் 4: உங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த வீண் பழி அகலும். பணிச்சுமை கூடும்.
அனுஷம்: பிறருக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டாம். அதுவே நல்லது.
கேட்டை: உங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி மற்றவர் பயன்பெறுவர்.

தனுசு:

மூலம்: தள்ளிப்போன விஷயம் ஒன்று தானாக முடிவடையும் நாள்.
பூராடம்: இடம் வாங்க, விற்க எடுத்த முயற்சிகள் இன்று கைகூடும்.
உத்திராடம் 1: ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பணியிடத்தில் யாருடைய வம்புக்கும் போக வேண்டாம்.
திருவோணம்: உங்களுடைய நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறும். மகிழ்ச்சி கூடும்.
அவிட்டம் 1,2: உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: திருமணத்திற்காக காத்திருப்போருக்கு வரன்கள் தேடி வரும்.
சதயம்: வாழ்வில் வளர்ச்சி கூடும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வந்து சேரும்
பூரட்டாதி 1,2,3: வீட்டில் நடைபெறும் சுபவிஷயங்கள் உங்களுக்கு திருப்தி தரும்.

மீனம்:

பூரட்டாதி 4: பணியாளர்கள் எடுத்த விஷயத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி: தாயின் உடல்நலம் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.
ரேவதி: சமூக சேவையில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினரால் நன்மை ஏற்படும்.

22nd October Today Raasi Palankal

Related posts

02-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

09.08.2020 இன்றைய ராசி பலன்கள்

Tharshi

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய கொரோனா விழிப்புணர்வுகள்..!

Tharshi

1 comment

Leave a Comment