குறும்செய்திகள்

சுன்னாகம் பகுதியில் கொவிட் தொற்று உறுதியான 10 பேர் சிகிச்சை நிலையங்களுக்கு செல்ல மறுப்பு..!

Chunnakam people infected with covid19 refuse to go to treatment centers

சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் 10 பேருக்கு கொவிட்-19 தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

தொற்றாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதையடுத்து, சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். எனினும் தொற்றாளர்கள் கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல மறுத்துவரும் நிலையில் இராணுவத்தினரிடம் அவர்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் தொற்றுக்குள்ளானவர்கள் தமக்கு கொவிட் தொற்று இல்லை எனவும் பரிசோதனைகளில் நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்து தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுவரும் அதேவேளை, தங்களை வற்புறுத்தினால் உயிரை மாய்ப்போம் என்றும் எச்சரித்தனர்.

இதனையடுத்து தொற்றாளர்களை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Chunnakam people infected with covid19 refuse to go to treatment centers

Related posts

கறிவேப்பிலை ரச சூப் எவ்வாறு செய்யலாம்..!

Tharshi

நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்த நடிகை..!

Tharshi

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..!

Tharshi

Leave a Comment