குறும்செய்திகள்

விஷாலுக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.சௌத்ரி..!

RB Chowdhury warning to Vishal

சமீபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், ஆர்.பி.சௌத்ரி ஆவணங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“சக்ரா” திரைப்படத்தை தயாரிப்பதாக நடிகர் விஷால், ஆர்.பி.சௌத்ரியிடம் பணம் பெற்று இருந்தார். அதற்கு பிணையாக சில ஆவணங்களையும் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பணம் கொடுத்த பின்பும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி அந்த ஆவணங்களை திருப்பி தர மறுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள ஆர்.பி.சௌத்ரி, அந்த ஆவணங்களை கொடுத்து வைத்திருந்த அவரது மேலாளர் சிவக்குமார் மறைந்து விட்டதாகவும், நடிகர் விஷால் முன்னெச்சரிக்கையாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது நல்ல விஷயம் என்றாலும் அதற்கு முன்பு தன்னிடம் ஒருமுறை ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்ற ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார்.

இதுநாள் வரையிலான தன்னுடைய திரை அனுபவத்தில், பணம் தொடர்பாக புகாரை சந்திப்பது இதுவே முதல் முறை என்றும் ஆர்.பி.சௌத்ரி அப்போது குறிப்பிட்டுள்ளார்.

விஷாலின் ஆவணங்களை சிவக்குமார் வேறு யாரிடமாவது கொடுத்து வைத்திருந்தால், அதனை உடனடியாக திருப்பி கொடுக்குமாறும், அதனை பயன்படுத்த முயற்சி செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

RB Chowdhury warning to Vishal

Related posts

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : மேஷம்

Tharshi

கொழும்பில் மேலும் சில பகுதிகளில் இந்திய டெல்டா வைரஸ் : எச்சரிக்கை பதிவு..!

Tharshi

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,948 ஆக அதிகரிப்பு..!

Tharshi

Leave a Comment