குறும்செய்திகள்

25-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

25th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 25.2021

பிலவ வருடம், ஐப்பசி 8, திங்கட்கிழமை,
தேய்பிறை, பஞ்சமி திதி நாள் முழுவதும், மிருகசீரிடம் நட்சத்திரம் நள்ளிரவு 2:58 வரை,
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அனுஷம்
பொது : முகூர்த்த நாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: எதிர்பாராத நிகழ்வு தந்த மகிழ்ச்சியால் திணறுவீர்கள்..
பரணி: உறவினர்கள் ஒட்டுதலாய் இருப்பர். சுறுசுறுப்பான நாள்.
கார்த்திகை 1: பழைய பகையை மறப்பது நன்று. மகிழ்ச்சி தரும் செய்தி வரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பங்குச் சந்தை போன்றவற்றில் புதிய முதலீடு செய்வீர்கள்.
ரோகிணி: மற்றவர்கள் மீது கருணை ஏற்பட்டு நன்மை செய்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் தீரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: கடன் பாக்கிகளை அதிகம் முயன்று வசூலிப்பீர்கள்.
திருவாதிரை: முன்பு செய்த முதலீட்டால் மிக நல்ல லாபம் வரும்
புனர்பூசம் 1,2,3: முயற்சியால் முன்னேறும் நாள். பணிச்சுமை கூடும்.

கடகம்:

புனர்பூசம் 4: திடீரென்று தடைகள் விலகி வேலைகளை எளிதாக முடிப்பீர்கள்
பூசம்: பணியாளர்களின் கனவு நனவாகும். பொழுதுபோக்கு அதிகமாகும்.
ஆயில்யம்: நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிப்பீர்கள்.

சிம்மம் :

மகம்: முயற்சியில் தடை, தாமதம் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக முடியும்.
பூரம்: யாருக்கும் பணியில் சேர நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம்
உத்திரம் 1: உறவினர், நண்பர்களால் செலவுகள் ஏற்படலாம்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணியில் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.
அஸ்தம்: உங்களை பற்றிய விமர்சனங்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம்.
சித்திரை 1,2: சந்தோஷ காரணத்துக்காக அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

துலாம்:

சித்திரை 3,4: நண்பர்களின் ஒத்துழைப்பால் நன்மை அடைவீர்கள்.
சுவாதி: உங்களது பேச்சில் கவர்ச்சி அம்சம் கூடும். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
விசாகம் 1,2,3: தகுதிக்கேற்ற பதவி உயர்வை அடைவீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும்.
அனுஷம்: மற்றவர்ளை திருப்தி செய்ய யாரையும் தாக்கிப் பேச வேண்டாம்.
கேட்டை: எதிரிகளை எளிதாக வெல்வீர்கள். திடீர் செலவு உண்டாகும்.

தனுசு:

மூலம்: அலுவலகத்தில் ஆரோக்கியமான விவாதங்களில் உங்களின் அறிவாற்றல் வெளிப்படும்.
பூராடம்: பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
உத்திராடம் 1: பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு மட்டும் பயப்படுங்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: சுபநிகழ்ச்சிகள் செய்யும் முயற்சி ஒன்றில் வெற்றி கிட்டும்.
திருவோணம்: அலுவலகத்தில் இருந்து மகிழ்ச்சி அளிக்கும் செய்தி வந்து சேரும்.
அவிட்டம் 1,2: நீங்கள் மதிக்கும் நபர்களிடம் இருந்து உதவி கிடைக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். மகிழ்ச்சி கூடும்.
சதயம்: முன்கோபத்தை தவிருங்கள். பேச்சில் நிதானம் தேவை.
பூரட்டாதி 1,2,3: அலுவலகத்தில் சாதாரணப் பேச்சை சண்டையாக்காதீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: பணியாளர்களுக்கு மகிழ்ச்சி கூடும். உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உத்திரட்டாதி: யாரையும் நம்பி உங்கள் மனக்குறையைச் சொல்ல வேண்டாம்.
ரேவதி: சகோதர, சகோதரிகளுக்கு நன்மை ஏற்படும். மனஅமைதி கூடும்.

25th October Today Raasi Palankal

Related posts

கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கான சில சித்த மருத்துவ முறைகள்..!

Tharshi

அரிதான ஹைபிரிட் சூரிய கிரணம் இவ்வாரம்..!

Tharshi

21-10-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment