குறும்செய்திகள்

30-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

30th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 30.2021

பிலவ வருடம், ஐப்பசி 13, சனிக்கிழமை,
தேய்பிறை, நவமி திதி காலை 10:37 வரை,
அதன்பின் தசமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் காலை 9:48 வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : திருவோணம்
பொது : பெருமாள் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: அலுவலக கவலை தீரும். குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பீர்கள்.
பரணி: முக்கியமான பொருட்களுக்காக செலவு செய்வீர்கள்.
கார்த்திகை 1: சுபச்செலவுகள் அதிகரிக்கும். மன உளைச்சல் நீங்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: அலுவலக சவால்களை சமாளிக்கும் திறனை பெறுவீர்கள்.
ரோகிணி: உணவு விஷயத்தில் அதிக அக்கறை கொள்ளுங்கள்
மிருகசீரிடம் 1,2: குழந்தைகளின் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: தாயாரால் நன்மை ஏற்படும். நிம்மதி அதிகரிக்கும்.
திருவாதிரை: நண்பர்களிடம் இருந்து உதவி கிடைப்பதால் நெகிழ்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: அலுவலகத்தில் நிதானத்தோடும், பொறுமையோடும் செயல்படுங்கள்

கடகம்:

புனர்பூசம் 4: பொறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் வரும்.
பூசம்: பல நாட்களாக தீர்க்க முடியாத பிரச்னை இன்று நண்பரால் தீரும்.
ஆயில்யம்: எதிர்பாலினத்தை சேர்ந்த நட்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம் :

மகம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். எதிர்பாராத மகிழ்ச்சி உண்டு.
பூரம்: குடும்பத்தில் ஒருவர் வெளிநாடு செல்ல ஏற்பாடாகும்.
உத்திரம் 1: கவலைகள் மறக்கும்படியான செய்தி ஒன்று வரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சாதுர்யமாக செயல்பட்டு பிரச்னையில் இருந்து தப்புவீர்கள்.
அஸ்தம்: மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
சித்திரை 1,2: பொழுது போக்கு அம்சங்களால் கவலைகளை மறப்பீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் தோன்றி மறையும்.
சுவாதி: உங்களின் தனித்திறமைகள் வெளிப்பட்டு பாராட்டு வரும்.
விசாகம் 1,2,3: பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: பணியாளர்கள் பேச்சு, செயலில் கவனமாக இருக்க வேண்டும்.
அனுஷம்: பல நாட்களாக காத்திருந்த விஷயம் ஒன்று இன்று நிகழும்.
கேட்டை: எதிரிகள் விலகுவர். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு:

மூலம்: பொருளாதார நிலையை பற்றி கவலைப்படாதீர்கள்.
பூராடம்: பணியிட வேலைகளை விரைந்து முடித்து நன்மை காண்பீர்கள்.
உத்திராடம் 1: குழந்தைகளால் பெருமை வரும். பணத்தின் அருமையை உணர்வீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: உங்களின் செயல்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
திருவோணம்: உடல் சோர்வு ஏற்படலாம். அழகுணர்ச்சி கூடுதலாகும்.
அவிட்டம் 1,2: தீயவழியில் பணவரவுக்கு வாய்ப்பு இருந்தால் அதை ஏற்க வேண்டாம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
சதயம்: பொருளாதார நிலையில் இருந்து வந்த மந்த நிலை நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: தடைகளும் தாமதங்களுமாக இருந்த பயணம் ஏற்பாடாகும்.

மீனம்:

பூரட்டாதி 4: பணியில் இது நாள் வரை இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.
உத்திரட்டாதி: நியாயமான கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
ரேவதி: சுறுசுறுப்பான நாள். பெரியோரின் ஆலோசனை கிடைக்கும்.

30th October Today Raasi Palankal

Related posts

பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஐபோன் 14 சீரிஸ் 2022 இல்..!

Tharshi

27-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இன்று இதுவரை 2759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment