குறும்செய்திகள்

19.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

19th August Today Raasi Palankal

மேஷம்: திருப்பங்கள் நிறைந்த நாள். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.

ரிஷபம் : நல்லது நடக்கும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களை மேலதிகாரிகள் ஆதரிப்பர். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிம்மதியாக முடிவுக்கு வரும். பொதுநல சேவை செய்வீர்கள்.

மிதுனம் : சாதகமான சூழ்நிலை ஏற்படும் நாள். எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள் பயணங்கள் தள்ளிப்போகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்ததை விடக் குறைவான பாராட்டுக் கிடைக்கும்.

கடகம்: தேவைகள் நிறைவடையும் நாள். சக பணியாளர்களால் இழந்திருந்த நிம்மதி மீளும். அழகும் இளமையும் அதிகரிக்கும். நிதி விவகாரங்களில் இருந்த அதிருப்தியான நிலை சற்றே மாறும். வியாபாரத்தில் தேக்க நிலை தீரும்.

சிம்மம் : புதிய முன்னேற்றங்களை அடையும் நாள். வேலை தேடுபவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் புலப்படும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை நிறைவேறும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இன்று வரும்.

கன்னி: பயம் தீரும் நாள். மருத்துவ சிகிச்சை சாதகமன பலனைத் தரும். எதிர்பாலினத்தினரால் இருந்து வந்த தொல்லைகள் தீரும். குடும்பத்தில் பகை மாறி பாசம் கூடும். வரவு திருப்தி தரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்: எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் நாள். விசா தொடர்பான பிரச்னைகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். அதிக நேர விரயம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிலவும். பழைய விஷயங்களை அசைபோடுவீர்கள்.

விருச்சிகம்: மன உறுதியுடன் செயல்படும் நாள். மருத்துவ செலவுகள் குறைந்து நிம்மதி கூடும். வியாபாரிகள் முயற்சிகளை இன்று துவக்கலாம். நேற்று சண்டையிட்டவர் இன்று மாறுவர். காதல் விவகாரங்களில் கவனம் தேவை.

தனுசு: பிரச்னைகள் தீரும் நாள். ஒரு பெண் ஆதரவாகச் செயல்படுவார். குடும்ப நிலைமைகள் மேம்படும். நல்ல செய்திகள் வரும். ஒரு சிலரிடம் மாற்றத்தைப் பற்றி வியப்பீர்கள். வரவறிந்து செலவு செய்வீர்கள்.

மகரம் : மன குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். சிலர் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பர். மருத்துவச் செலவு அதிகரிக்கும். வழக்குத் தொடுக்க வேண்டாம். பணியாளர்கள் முழு கவனத்துடன் செயல்படுங்கள்.

கும்பம்: இனிமையான நாள். சக பணியாளருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு நன்மை கூடும்.

மீனம்: மனதில் அமைதி தவழும் நாள். கணவருக்கு முன்னேற்றமான சூழல் தெரியும். உடல் நிலை பற்றிய பயம் குறையும். குழந்தைகளின் நலன் நிம்மதியளிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுது கழியும்.

< Most Related News >

Tags :-19th August Today Raasi Palankal

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை..!

Tharshi

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கும் வெங்காய தேநீர்..!

Tharshi

இந்திய குத்து சண்டை போட்டியில் துரோணாச்சார்யா விருது வென்ற முதல் பயிற்சியாளர் காலமானார்..!

Tharshi

32 comments

Leave a Comment