குறும்செய்திகள்

கணவரோட மர்ம உறுப்ப சிதைச்சிடுங்க.. கூலிப்படைக்காக பின்புற வாசலை திறந்து வைத்த மனைவி : கொடூர சம்பவம்..!

Nagercoil wife plan murder of husband

கன்னியாகுமரி அருகே, முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ள உறவால் ஆள் வைத்து கணவரின் ஆண் உறுப்பை சிதைத்து கொன்ற மனைவியின் சதி திட்டம் அம்பலமாகியுள்ளது.

இக்கொடூர சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

கன்னியாகுமரி நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அடுத்த கேசவ திருப்பபுரத்தில் காயத்ரி என்ற பெண்மணி தனது 4 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார் இவரின் கணவர் கணேஷ் புகைப்படக் கலைஞர் ஆவார்.

இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கத்தியால் நடு தலையில் வெட்டியும், ஆணுறுப்பை சிதைத்தும் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

அத்துடன், மனைவி காயத்ரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த கொலை முயற்சி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடசேரி பொலிசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

பொலிசார் கணேஷின் மனைவியிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சிகர சதி திட்டங்கள் அம்பலமாகியுள்ளது.

அதாவது, மதுரையை பூர்விகமாக கொண்ட காயத்ரி, திருமணத்திற்கு முன்பாக யாசின் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். காயத்ரியின் பெற்றோர் இவர்களின் காதலை பிரித்து கணேஷிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும் காயத்ரி யாசினின் காதல் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்துள்ளது.

இந்நிலையில், காயத்ரியை விட்டு பிரிய முடியாத யாசின் நாகர்கோவில் கேசவ திருப்பபுரத்தில் ப்ளே ஸ்கூல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதற்கு போதிய பணம் இல்லாததால் காதலருக்கு உதவ விரும்பிய காயத்ரி கணவர் பெயரில் இருக்கின்ற வீட்டு பத்திரத்தை எடுத்து தனது சொந்த அண்ணனுக்கு உதவுவதற்காக கணவனை ஏமாற்றி காதலன் யாசினுக்கு அடமானம் வைத்து கொடுத்துள்ளார்.

அதன் மூலம் கிடைத்த 10 லட்சம் ரூபாயை கொண்டு ப்ளே ஸ்கூல் தொடங்கி, அதன் ஆசிரியையாகவும் காயத்திரியை யாசின் அமர்த்தியுள்ளார். மேலும் இருவரும் ப்ளே ஸ்கூலை கவனிக்காமல் கணவருக்கு தெரியாமல் ஊர் ஊராக சுற்றியதால் ப்ளே ஸ்கூல் நஷ்டமடைந்து வீட்டுப் பத்திரத்தை மீட்க இயலாமல் போயுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கணவர் கணேஷ் வீட்டு பாத்திரம் குறித்து கேட்கும் போது ஏதேதோ சொல்லி சமாளித்துள்ளார் காயத்ரி. இந்நிலையில் கணவருக்கு எதுவும் தெரியக்கூடாது என நினைத்து யாசினும் காயத்ரியும் சேர்ந்து கணவரை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதனால், கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமாரை அழைத்து 2 லட்சம் ரூபாய் தருவதாக கூறி கணவர் கணேஷை கொலை செய்துள்ளனர். மேலும் அடியாட்கள் வந்து செல்வதற்கு வசதியாக பின்புற கதவு முதல் அனைத்து கதவுகளையும் பூட்டாமல் சாத்தி வைத்திருந்துள்ளார் காயத்ரி. அதுமட்டுமில்லாமல் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளதாக நிரூபிக்க கணவரின் ஆண் உறுப்பை சிதைக்க சொன்னதையும் ஒப்புக் கொண்டுள்ளார் காயத்ரி.

இந்த விசாரணை முடிவில், கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார், கருணாகரன் ஆகியோரையும் காயத்ரியையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள கள்ளக்காதலன் யாசினை பொலிசார் தேடி வருகின்றனர்.

< Most Related News >

Tags :-Nagercoil wife plan murder of husband

Related posts

நடிக்காமலே முழு சம்பளத்தை வாங்கிய நடன நடிகர்..!

Tharshi

சமந்தாவுடன் விவாகரத்தா..? : மனம் திறந்த நாக சைதன்யா..!

Tharshi

நீர்வேலியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் கைது..!

Tharshi

24 comments

Leave a Comment