குறும்செய்திகள்

18.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

18th August Today Raasi Palankal

மேஷம்: அறிவுப் பூர்வமாக செயல்படும் நாள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தை இடம் மாற்றுவீர்கள். பணியாளர்களின் மரியாதை கூடும். முயற்சிகள் கைகூடும்.

ரிஷபம் : மன மகிழ்ச்சி கூடும் நாள். உடல்நலம் மேம்படும். பணியில் கவனச்சிதறல் ஏற்படக்கூடும். பணியிடத்தில் சில தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். பெண்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவர். நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும்.

மிதுனம் : உற்சாகமடையும் நாள். பிறருக்காக கடினமாக உழைக்க வேண்டி வரும். குடும்ப மகிழ்ச்சி நிலைக்கும். பிரச்னைகளுக்குப் புதிய வகைத் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் நன்மை உண்டு. வழிபாட்டு நம்பிக்கை கூடும்.

கடகம்: நிம்மதி மீளும் நாள். வாக்குவாதங்கள் குறையும். எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம். நண்பர்களை நம்பியது வீண்போகாது. பணியாளர்களின் வேலைச்சுமை குறையும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்பு வரும்.

சிம்மம் : ஏற்றம் பெறும் நாள். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு வெற்றி வரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். எழுத்தாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். மனக்கவலையிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னி: அமைதியான நாள். வேலையாட்களின் ஒத்துழைப்பால் தொழில் செழிக்கும். சகாக்கள் ஒத்துழைப்பார்கள். பணியாளர்கள் நிம்மதி காண்பீர்கள். பெண்களால் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நிறைவேறும். பழைய நினைவுகள் ஏற்படும்.

துலாம்: பரபரப்பான நாள். எதிரிகளைப் பக்குவமாகச் சமாளிப்பீர்கள். தொழிலில் புதிய பணியாளர்களைச் சேர்ப்பீர்கள். பொது நலத்தில் ஆர்வம் கூடும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். வழக்குகள் திசை திரும்பக்கூடும்.

விருச்சிகம்: குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். பணியாளர்களின் நேற்றைய பிரச்னை இன்று நல்ல முடிவிற்கு வரும். வெளிநாட்டு முயற்சியில் வெற்றி கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். நல்ல செய்தி ஒன்று வரும்.

தனுசு: மன அமைதி குறையும் நாள். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து பயம் வரும். என்றைக்கோ பேசியவற்றால் இன்றைக்குத் தொல்லைக்கு ஆளாகக்கூடும்.

மகரம் : கவலை தரும் நாள். நிதி விவகாரங்களில் கவனம் தேவை. மன அமைதிக்கு தியானம் செய்யவும். பணியாளர்கள் யாரிடமும் குரல் உயர்த்தி வாதிட வேண்டாம். கலைஞர்கள் காத்திருக்க வேண்டிவரும்.

கும்பம்: சுபச்செய்தி வரும் நாள். உங்களைப் பற்றிப் பெருமையடையும் செய்தி வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுக்குச் சற்று காத்திருக்கவும். தன வரவு உண்டு. புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும் நாள். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். பெண்களுக்குத் திட்டங்கள் நிறைவேறும். கலைஞர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நன்மை காண்பீர்கள்.

< Most Related News >

Tags :-18th August Today Raasi Palankal

Related posts

20-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

4 பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்..!

Tharshi

இளநீர் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா..!

Tharshi

18 comments

Leave a Comment