குறும்செய்திகள்

19-12-2020 – இன்றைய ராசி பலன்கள்

இன்று டிசம்பர் 19,2020

சார்வரி வருடம், மார்கழி மாதம் 4 ஆம் திகதி, ஜமாதுல் அவ்வல் 4 ஆம் திகதி,
19.12.2020, சனிக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி மாலை 6:10 வரை,
அதன்பின் சஷ்டி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 11:42 வரை,
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : புனர்பூசம். பூசம்
பொது : அனுமன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: உங்களின் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.
பரணி: உறவினர்களால் சிறு சிக்கல் உண்டாகி அது இன்றைக்கே நீங்கும்.
கார்த்திகை 1: உடல் நலனில் சிறிதளவேனும் கவனம் கொள்வது நல்லது.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பிரச்னைகளை நண்பர்களுடன் பகிர்ந்து, தீர்வு காண்பீர்கள்.
ரோகிணி: மனதிடம் கூடும். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும்.
மிருகசீரிடம் 1,2: சிலருக்கு வீட்டிலிருந்து வெளியில் தங்கும் சூழல் ஏற்படும்.

மிதுனம் :

மிருகசீரிடம், 3,4: எடுத்த பணியை செய்யும்போது சிறிய தடுமாற்றம் ஏற்படும்.
திருவாதிரை: உங்களது திறமையால் பணிகளைச் செய்து முடித்து மகிழ்வீர்கள்.
புனர்பூசம்: 1,2,3: பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். நிதி உதவி கிடைக்கும்.

கடகம்:

புனர்பூசம்,4: பிறரால் ஏமாறும் சூழல் ஏற்படலாம். வாக்குவாதம் வேண்டாம்.
பூசம்: புதிய முயற்சிகள் வேண்டாம். பகைவர்களை மன்னிப்பது நல்லது.
ஆயில்யம்: வியாபார முன்னேற்றம் உண்டு. நேற்றைய கவலை தீரும்.

சிம்மம் :

மகம்: நிதி நிலை சீராக இருக்கும். கடன் பாக்கிகள் சிறிதளவு வசூலாகும்.
பூரம்: எதிர்பாலினத்தைச் சேர்ந்த புதிய நண்பர்கள் வாழ்வில் வருவார்கள்.
உத்திரம்,1: புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். சவால்களில் வெல்வீர்கள்.

கன்னி:

உத்திரம்,2,3,4: சமூகத்தில் உங்களின் செல்வாக்கும், மதிப்பும் உயரும். பண வரவு கூடும்.
அஸ்தம்: திறமைக்கேற்ப பலன் பெறுவீர்கள். பொதுப்பணிகளில் ஈடுபாடு வரும்.
சித்திரை, 1,2: நிர்வாகத்திறமை வெளிப்படும். பெரியோரின் ஆசி பெறுவீர்கள்.

துலாம்:

சித்திரை, 3,4: திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகளில் சில சிறிய குறுக்கீடுகள் வந்து விலகும்.
சுவாதி: பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது மிகவும் நல்லது.
விசாகம் 1,2,3: ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் வருமானம் கிடைக்கும்.

விருச்சிகம்:

விசாகம்,4: முன்னேற்றத்தில் இருந்து வந்த தடை நீங்கி நம்பிக்கை வரும்.
அனுஷம்: வாழ்க்கை வசதிகள் கூடும். எதிலும் அவசரப்போக்கு வேண்டாம்.
கேட்டை: எதிர்ப்புக்கள் பல இருந்தாலும் அவற்றைச் சமாளித்து மீளுவீர்கள்.

தனுசு:

மூலம்: விழிப்புணர்வு அவசியம். யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.
பூராடம்: வழக்கு, விவகாரங்களை இப்போதைக்கு தள்ளி வையுங்கள்.
உத்திராடம்,1: வியாபாரிகள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும்.

மகரம் :

உத்திராடம்,2,3,4: எதிர்வரும் சில பிரச்னைகளை தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள்.
திருவோணம்: தகுதியற்றவர்களுடன் கொண்டிருந்த நட்பை விலக்கிக்கொள்வீர்கள்.
அவிட்டம்,1,2: பணியாளருக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம்.

கும்பம்:

அவிட்டம், 3,4: சம்பள உயர்வும் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
சதயம்: கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
பூரட்டாதி,1,2,3: வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளுடன் நெருக்கம் அதிகரிக்கும்.

மீனம்:

பூரட்டாதி, 4: பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள்.
உத்திரட்டாதி: பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பேசுவது நல்லது.
ரேவதி: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். தைரியைம் அதிகரிக்கும்.

< Most Related News >

Tags :-19th December Today Raasi Palankal

Related posts

தெலுங்கு படத்தில் வில்லனாக மிரட்டும் விஜய்சேதுபதி..!

Tharshi

அதிகளவில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்..!

Tharshi

பொலிஸ் அதிகாரியை மோதி தப்பிச் சென்ற கார் மற்றும் உரிமையாளர் தொடர்பில் வெளியான தகவல்..!

Tharshi

Leave a Comment