குறும்செய்திகள்

02.09.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

2nd September Today Raasi Palankal

மேஷம்:

அசுவினி : இனிமையான நாள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
பரணி : சுபநிகழ்ச்சி விஷயமான முயற்சிகள் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும்.
கார்த்திகை 1 : பெண்களுக்கு இழந்த பொருட்கள் கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை உண்டு.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4 : புதிய முயற்சி எடுக்கும் நாள். வியாபாரத்தில் ஒரளவு நன்மை உண்டு.
ரோகிணி : உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட கவலைகள் மாறும்
மிருகசீரிடம் 1,2 : வழக்குகளில் திசைதிருப்பம் ஏற்படும். சுபச்செய்தி உங்களைத் தேடி வரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4 : அதிர்ஷ்டமான நாள். குடும்பத்தினரின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பீர்கள்.
திருவாதிரை : முக்கியப் பிரமுகரின் நட்புக் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
புனர்பூசம், 1,2,3 : நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

கடகம்:

புனர்பூசம் 4 : முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
பூசம் : எதையும் திட்டமிட்ட வகையில் செய்ய இயலாது. கணவரின் உடல் நலனில் கவனம் தேவை.
ஆயில்யம் : திடீர் பகை உருவாகலாம். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

சிம்மம் :

மகம் : கவலைகள் முடிவுக்கு வரும் நாள். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
பூரம் : மேலதிகாரி பணியின் நுணுக்கங்களை கற்றுத் தருவார் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
உத்திரம் 1 : பணத்தை கவனமாக கையாளுங்கள். யாரிடமும் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4 : நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும்.
அஸ்தம் : கனவுகள் நனவாகும் நாள். சொத்துக்கள் வாங்குவது பற்றி திட்டங்களை தீட்டுவீர்கள்.
சித்திரை 1,2 : பணியாளர்களுக்கு அலட்சியம் வேண்டாம். நண்பர்களிடம் எண்ணங்களைப் பகிர்வீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4 : பிள்ளைகளின் திருமணம் குறித்து யோசிப்பீர்கள். செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.
சுவாதி : மன நிறைவு ஏற்படும் நாள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சற்றே அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3 : பொருட்கள் வாங்குவதால் செலவுகள் ஏற்படலாம். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்னை அகலும்.

விருச்சிகம்:

விசாகம்,4 : குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களிடம் எண்ணங்களைப் பகிர்வீர்கள்.
அனுஷம் : நம்பிச் செய்தவை நல்லவிதமாக நடைபெறும் நாள். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் வரும்.
கேட்டை : வெளிவட்டாரப் நட்பு விரிவடையும். பணியாளர்களுக்கு புதிய யுக்திகள் தோன்றும். கலைஞர்கள் வெற்றி பெறுவர்.

தனுசு:

மூலம் : உழைப்பால் உயரும் நாள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வந்து சேரும்.
பூராடம் : வியாபாரத்தில் புது பங்குதாரரை இப்பேதைக்குச் சேர்க்க வேண்டாம்.
உத்திராடம் 1 : பணியாளர்களுக்கு திருப்தி உண்டாகும். கணவருக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.

மகரம் :

உத்திராடம்,2,3,4 : திட்டமிட்ட பணிகள் நன்றாக நடைபெறும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும்.
திருவோணம் : நட்பென்று நம்பியவர்களால ஏற்பட்ட தொல்லை அகலும். மாற்று மருத்துவத்தால் தாயின் உடல் நலம் சீராகும்.
அவிட்டம் 1,2 : இளைஞர்கள் புதிய விஷயங்கள் கற்பீர்கள்.

கும்பம்:

அவிட்டம், 3,4 : நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்காது.
சதயம் : வேற்று மொழி பேசுபவர்கள் நட்பாவர்கள். சிலர் மீது அபிப்ராயம் மாறும்.
பூரட்டாதி 1,2,3 : இழந்த உரிமை மீளும். மின்னணு பொருட்களை வாங்குவீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4 : தன்னம்பிக்கையோடு பணிபுரியும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : தொழில் வளர்ச்சிக்கு புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.
ரேவதி : பூர்வ சொத்துப் பிரச்னைகள் நல்ல முடிவிற்கு வரும்.

< Most Related News >

Tags :-2nd September Today Raasi Palankal

Related posts

05-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

சீரற்ற காலநிலை : மரணித்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!

Tharshi

கணவரை விட்டு பிரிந்த காரணத்தை பிக்பாஸிடம் போட்டுடைத்த ரச்சிதா..!

Tharshi

59 comments

Leave a Comment